நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் சற்றுமுன் தாக்கல்  செய்தார். அப்போது பேசிய அவர், நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்றும் பழங்குடி மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்தியா சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பிரகாசமான எதிர்காலம் தெரிகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் 157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கல்வித்திறனை மேம்படுத்த குழந்தைகள், வளர் இளம் பருவத்தினருக்கு டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். தேசிய டிஜிட்டல் நூலகத்தை மாநிலங்கள் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யப்படும். பஞ்சாயத்து  அளவில் டிஜிட்டல் நூலகங்கள் தொடங்க ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.