அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வீர வரலாறு இன்றைக்கு பொன்விழா எழுச்சி மாநாடு சிறப்பாக நடந்து முடிந்திருக்கின்றது. இந்த மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு இன்றைக்கு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. மாநாடு ஒருங்கிணைப்பு குழு ,  மாநாடு விழா மலர் குழு, மாநாடு அரங்கம் அமைக்கும் குழு,  மாநாடு விளம்பரம் – செய்தி தொடர்பு மற்றும் எழுச்சித்தரும் ஒருங்கிணைப்பு குழு,  மாநாடு உணவுக் குழு,  மாநாடு தீர்மானக்குழு,  மாநாடு வரவேற்பு குழு,  மாநாடு தொண்டர் படை குழு, மாநாடு மருத்துவர் குழு.

இந்தக் குழுவில் இருக்கின்ற அத்தனை பொறுப்பாளர்களுக்கும் உங்கள் சார்பாக எனது சார்பாக மனமார பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் சொந்த வேலைகள் எல்லாம் விட்டுவிட்டு தலைமைக் கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க பலமுறை மதுரைக்கு வந்து இந்த மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த அத்தனை பேரும்,  மேடையில் வீற்றிருக்கின்ற கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி, நன்றி.

அதேபோல இந்த மாநாடு சரித்திர சாதனை படைத்திருக்கிறது. இதுவரை தமிழகத்திலே எந்த ஒரு மாநில மாநாட்டிற்கும் 15 லட்சம் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் வந்தது கிடையாது. அந்த சரித்திரத்தை வீர வரலாறு எழுச்சி மாநாடு அடைந்து விட்டது. அந்த சகாப்தத்தை நீங்கள் உருவாக்கி விட்டீர்கள். அதேபோல இந்த மாநாடு சிறக்க பல்வேறு நிலையிலே  உதவிகரமாக விளங்கியவர் மாநாட்டு பந்தலுக்கு இடம் வழங்கி கொடுத்த நல்ல உள்ளம் படைத்தவர் மதிப்பிற்குரிய திரு ஜெகதீசன் அவர்கள்,  திரு கார்த்திக் அவர்களுக்கும்,

பந்தல் அமைப்பு சேகர் அவர்களுக்கும்,  ஒளி – ஒலி அமைப்பு சுரேஷ் அவர்களுக்கும்,  அலங்கார அமைப்பு சங்கர் அவர்களுக்கும்,  பச்சை பந்தல் அமைப்பு திரு. ரவிக்குமார் அவர்களுக்கும்,  எல்.இ.டி திரை அமைப்பு மாதவன் அவர்களுக்கும், புகைப்பட கண்காட்சி அமைப்பு திரு மனோஜ் மற்றும் வேலு அவர்களுக்கும், இசை நிகழ்ச்சி தேனிசை தென்றல், திரு தேவா அவர்களுக்கும்,  கிராமிய பாடல் திரு. செந்தில் – திருமதி ராஜலக்ஷ்மி அவர்களுக்கும்,

பல்சுவை நிகழ்ச்சி திரு மதுரை முத்து அவர்களுக்கும்,  ஒயிலாட்ட குழுவினர் நம்முடைய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களுக்கும்,  திரு செல்வம் அவர்களுக்கும்,  திரு சக்திவேல் அவர்களுக்கும், முருகன் அவர்களுக்கும், இங்கே வருகை தந்து பசியால் வாடியவருக்கு அருமையான… சுவையான… உணவை தயாரித்து வழங்கிய சமையல் திரு மதுரை சீனிவாசன் அவர்களுக்கும் மற்றும் பட்டிமன்றத்திற்கு தலைமை தாங்கிய தலைவர்களுக்கும்,  பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு சிறப்பான கருத்துக்களை எடுத்து வைத்த பேச்சாளர்களுக்கும்,  கவிஞர்களுக்கு தலைமை  தாங்கிய தலைவருக்கும், கவியரங்கில் அற்புதமான கருத்தை வழங்கிய கவிஞர்களும் இப்படி பல வகையிலும் மாநாடு சிறக்க உதவி அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி என பேசி முடித்தார்.