தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அண்ணாமலையை இணையதள பேட்டியில் விமர்சித்ததாக அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவன முறைகேடு பற்றி அண்ணாமலை கூறிய கருத்தை விமர்சித்ததாக அமைச்சருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மான நஷ்ட ஈடாக ஒரு கோடி ஆவின் வைப்பு நிதிக்கு வழங்க வேண்டும்.  15 நாளில் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டரீதியாக வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.