தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் பகுதியில் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினராக நீலகண்டன் என்பவர் இருக்கிறார்.  கடந்த 2023 ஆம் ஆண்டு குடும்ப நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு சென்றபோது நீலகண்டன் அவருடைய 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது பற்றி வெளியே சொல்லக்கூடாது எனக் கூறி அவர் துப்பாக்கியை வைத்து மிரட்டிய நிலையில் அவர்கள் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்காததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது நீலகண்டன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் படி தான் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.