இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 14 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரினால் இரண்டு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சேவ் த சில்ட்ரன் என்ற சர்வதேச அமைப்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

அதாவது இஸ்ரேல் காசா மீது நடத்தும் தாக்குதலினால் ஒவ்வொரு 15 மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை உயிரிழப்பதாகவும் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.