உத்திரபிரதேசம் மாநிலம் மெயின்புரி  மாவட்ட மருத்துவ மனையில் நடந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிரவேஷ் குமாரி என்று 60 வயது மூதாட்டி நேற்று மாரடைப்பின் காரணமாக அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். அப்போது மூதாட்டியை கவனிக்காமல் மருத்துவர் செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார். அதாவது பணியில் இருந்த ஆதர்ஷ் சங்கர் என்ற டாக்டர் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட 15 நிமிடங்களில் மூதாட்டி உயிரிழந்து விட்டார்.

அந்த நோயாளியின் உடல்நிலை மோசமடைவதாக தொடர்ந்து அவருடைய மகன் கத்தி கூச்சலிட்ட போதிலும் மருத்துவர் அதனை கவனிக்காமல் செல்போனில் மூழ்கிக் கிடந்துள்ளார். பின்னர் மூதாட்டி உயிரிழந்து விட்டதால் அங்கு பிரச்சனை ஏற்பட்ட நிலையில் உடனடியாக காவல்துறையினர் வந்து பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இது தொடர்பான சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் உறுதி கொடுத்துள்ளது.