சென்னை, ஆசனூரில் பெட்ரோல் ஏற்றி செல்லக்கூடிய லாரியின் உரிமையாளர்கள், நல சங்கத்தின் வாயிலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் இந்தியன் ஆயில் நிறுவனத்தினரின் அதிகாரப் போக்கை கண்டிப்பதற்காக நடைபெற்றது. இதனால் தண்டையார்பேட்டை  எண்ணூரில் உள்ள ஐஓசி நிறுவனம் முன்பாக 100-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனை அறிந்த ஐஓசி நிறுவனமனது முன்கூட்டியே தங்களது டீலர்களுக்கு பெட்ரோல், டீசல் பாதிப்பு ஏற்படாத வகையில் இருப்பு வைக்க முடிவு செய்தனர். அதன்படி பொது மக்களுக்கு பெட்ரோல் டீசல் பாதிப்பின்றி வழங்கப்பட்டது. இதுகுறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது, இது அடையாள வேலை நிறுத்தம் தான். 15 நாட்களுக்குள் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், வருகிற 26 ஆம் தேதி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம். இந்த போராட்டத்தில் பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஊழியர்களின் லாரிகளும் ஈடுப்படும் என்று கூறினர்.