பாகிஸ்தான் நாட்டிலிருந்து சுதந்திரம் கோரி பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தினர் ஆயுதம் ஏந்தி தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தினர் 400 பயணிகளுடன் சென்ற ரயிலை கடத்தினர். அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் 33 கிளர்ச்சியாளர்களைக் கொன்று பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்த நிலையில் ரயில் கடத்தல் சம்பவத்திற்கு இந்தியா காரணம் என்று பாகிஸ்தான் மறைமுகமாக குற்றம் சாட்டி வருகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சௌகத் அலிகான் கூறியதாவது, பாகிஸ்தானில் பயங்கரவாத செயல் அரங்கேறியுள்ளது. இதற்கு இந்தியா பின்னணியில் உள்ளது. ரயில் கடத்தல் சம்பவத்தில் ஆப்கானிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளது என கூறினார்.

இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஸ்ரீ ரந்தீர் ஜெய்ஸ்வால், அடிப்படைய ஆதாரம் அற்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுக்கிறோம். பயங்கரவாதத்தின் மையம் எது என்பது இந்த உலகத்திற்கே தெரியும். உள்நாட்டு பிரச்சினைகளுக்கும் தோல்விகளுக்கும் மற்ற நாடுகளை காரணம் என பழி சுமத்துகின்றனர். அதனை விட்டு விட்டு தனது பிரச்சனையில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும். உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் மற்றவர்கள் மீது கை காட்டுவது தவறு என அவர் கண்டித்தார்.