அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று அந்த சிறுமி பள்ளியிலிருந்து கோச்சிங் கிளாஸ் முடிந்தவுடன் வீடு திரும்பியுள்ளார். அப்போது சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவரை 3 பேர் வழிமறித்துள்ளனர். அதன்பின் அவரை ஆளில்லாத இடத்திற்கு கடத்தி சென்று அங்கு வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததுடன் சம்பந்தப்பட்டவர்களை தேடி வந்தனர். இதில் தஃபுஜல் இஸ்லாம் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்ததுடன் அவரிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து இன்று காலையில் காவல்துறையினர் க்ரைம் சீனுக்காக தஃபுஜல் இஸ்லாமை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று அவரை அதன்படி நடித்து காட்ட கூறினர். அப்போது அவர் திடீரென காவல்துறையினரை தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளார். அவரைப் பிடிக்க காவல்துறையினர் துரத்தி சென்றனர். அப்போது அவர் அருகில் உள்ள குளத்துக்குள் குறித்துள்ளார்.

குளம் ஆழமாக இருந்ததால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தால் காவல்துறையினர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தற்போது விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அசாம் மாநில முதல்வர் “இது மனித குலத்திற்கு எதிரான குற்றம். எங்கள் கூட்டு மனசாட்சியை தாக்கி உள்ளது. நாங்கள் யாரையும் விட்டு வைக்க மாட்டோம் மற்றும் குற்றவாளிகளை நீதி முன் நிறுத்துவோம்” எனவும் விரைவான நடவடிக்கை எடுத்து உறுதி செய்யுமாறு காவல்துறையினருக்கு உற்றவைத்துள்ளார்.