ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி 2025 போட்டியில் 12வது ஆட்டத்திற்கான இந்தியா-நியூசிலாந்து அணிக்கான விளையாட்டு இன்று நடைபெற்றது. இந்த போட்டி துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸ்லாந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி பேட்டிங் செய்கிறது. இன்றைய ஆட்டம் 2 அணிகளும் ஏ பிரிவில் முதல் இடத்தை தக்க வைப்பது முக்கியம் என்பதால் போராடி வருகிறது. இந்நிலையில் முதலில் களம் இறங்கிய ஷுப்மன் ஹில் 7 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

பின் களத்தில் இருந்த ரோகித் சர்மா 17 பந்துகளில் 15 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். விராட் கோலி 14 பந்துகளில் 11 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்திய அணி 12 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி இன்று தனது 300-வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களம் இறங்கிய போது, அவரை உற்சாகப்படுத்த ரசிகர்கள் எழுப்பிய கோஷங்கள் மைதானத்தை அதிரவைத்தது. ஆனால் அவர் 14 பந்துகளில் ஆட்டம் இழந்து வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்தியாவின் முக்கிய விக்கட்டுகள் பறிபோனது. 14 ஓவரில் இந்தியா 3 விக்கெட் இழந்து 44 ரன்கள் எடுத்தது.