உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியில் 14 வயது சிறுமி ஒருவர் மந்திரவாதி ஒருவர் கையில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிகிச்சை அளிப்பதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்ற தந்திரி, அவரை கடத்திச் சென்றுள்ளார்.

சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் தந்திரியின் மொபைல் போனை கண்காணித்து அவரை கைது செய்தனர். சிறுமியை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

பரேலி மாவட்டம், பரீத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்த சிறுமி. கோபம் அதிகம் வருவதால், தனது பேத்திக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என முதியவர் ஒருவர் முடிவு செய்துள்ளார். அப்பகுதியில் வசிக்கும் தந்திரியிடம் பேத்தியை அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் தந்திரி, சிறுமியை நள்ளிரவில் வருமாறு கூறியுள்ளார். அதன்படி வந்த சிறுமியை தந்திரி கடத்திச் சென்றுள்ளார். சிறுமி காணாமல் போனதை அறிந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் தந்திரியின் மொபைல் போனை கண்காணித்து அவரை கைது செய்துள்ளனர்.

தந்திரி பல பெண்களை இவ்வாறு ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. அவர் அந்த பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக  கூறப்படுகிறது. மேலும் இதனால் தந்திரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.