ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரை எல்லை பகுதிகளில் நேற்று இரவு பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இந்த தாக்குதலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப், காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இந்திய ராணுவம் விடிய விடிய கண்காணித்தது.

இதில் காஷ்மீரில் வான் பாதுகாப்பு கவசம் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள 14 நகரங்களில் நேற்று பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் 26 டிரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது. இதன் காரணமாக சைரன் ஒலிக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

பெரோஸ்பூர் பகுதியில் தாக்குதலால் மூன்று வீடுகள் தீப்பிடித்து எரிந்த நிலையில் அங்கு சிக்கி இருந்தவர்களை ராணுவத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஹாஸ்பிடலில் அனுமதித்தனர். மேலும் நேற்று ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதலில் ஒரு அரசு ஊழியர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.