
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்டத்தில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் ஆசிரியராக இருக்கும் நிலையில் அதே பள்ளியில் 13 வயதுடைய மாணவன் ஒருவர் படித்து வருகிறான். இந்த மாணவனை திடீரென ஆசிரியர் கடத்தியதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில் குஜராத் ராஜஸ்தான் எல்லையில் உள்ள ஷாம்லாஜி பகுதியில் வைத்து அவர்களை பிடிபட்டனர்.
பின்னர் இருவரையும் சூரத் அழைத்து வந்த நிலையில் பின்னர் இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அப்போது ஆசிரியை 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இந்த கர்ப்பத்திற்கு மாணவன் தான் காரணம் என்று ஆசிரியை கூறிய நிலையில் போலீசார் அதிர்ச்சி அடைந்து உண்மையை உறுதி செய்வதற்காக டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்த ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவனை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.