புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் திருப்பட்டினம் என்ற பகுதி உள்ளது. இங்கு சந்தோஷ் (13) என்ற சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் 8-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவரை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்நிலையில் திருமலை ராஜன் ஆற்றுப்பாலத்தில் ரத்த வெள்ளத்தில் சிறுவனின் பிணம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்தப் பகுதியில் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது சந்தோஷ் (19) என்ற வாலிபருடன் சிறுவன் கடைசியாக விளையாடிக் கொண்டிருந்ததாக தகவல் தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகத்தின் பெயரில் சந்தோஷை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை செய்ய தேவையான உபகரணங்களை ஆன்லைனில் வாங்கியது தெரியவந்துள்ள நிலையில் தொடர்விசாரணையின் மூலம் கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளி யார் என்பது தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.