
தமிழ்நாடு மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த ஆண்டு 2024-2025 காண அரசு பொதுத்தேர்வு எதிர்கொள்ள காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது தேர்வு கட்டணம் குறித்த சந்தேகத்தை தமிழ்நாடு அரசு பள்ளி, கல்வி துறை மற்றும் தேர்வு இயக்குனரகம் தெளிவாக விளக்கியுள்ளது. பொதுச் தேர்வு கட்டணம் குறித்த விவரங்கள் பின்வருமாறு,
1. நவம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 10 ஆம் தேதிக்குள் மாலை 5 மணிக்குள் தேர்வு கட்டணத்தை கட்டாயமாக செலுத்திருக்க வேண்டும்.
2. www.dge.tn.gov.in என்ற தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் செலுத்த வேண்டும்.
3. கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ள மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.
4. அரசுப் பள்ளிகளில் படிக்கும் தமிழ் வழி கல்வி கற்கும் மாணவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
5. அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் இல்லாத பிறமொழி முறையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
6. SC/ST மற்றும் SC மாற்றுத்திறனாளிகள் மற்றும் MBC வருமான வரம்புகள் எதுவும் இன்றி தேர்வு கட்டணம் கிடையாது.
7. இதேபோன்று ஆண்டு வருமானம் குறிப்பிட வரம்புக்கு கீழ் உள்ள BC/BCM மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் கிடையாது.
8. மெட்ரிகுலேஷன் மற்றும் மிஷனரி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கட்டாயமாக தேர்வு கட்டணம் கட்ட வேண்டும். அவர்களுக்கு எந்தவித தள்ளுபடியும் கிடையாது.
9. இந்த தேர்வு கட்டணம் செலுத்துவது குறித்த தகவல்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் கேட்டறிந்து கொள்ளலாம். மேலும் அந்தந்த மாவட்ட வாரியாக கல்வி ஒருங்கிணைப்பாளர் தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டுக் கொள்ளலாம்.