
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் நகரில் சாமியார் ‘போலே பாபா’ என்ற நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் பலரும் கலந்து கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 122 பேர் உயிரிழந்தனர். 80 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு சுமார் 2.5 லட்சம் பேரை ஆன்மீக நிகழ்ச்சிக்காக வந்துள்ளனர். இந்த விபத்துக்கு பிறகு சாமியார் மீது பல பக்தர்களுக்கு நம்பிக்கை குறையவில்லை.
இது குறித்து அவர்கள் கூறுகையில், பாபாவின் டாலரை கழுத்தில் அணிவதால் நன்மைகள் கிடைக்கும், அமைதி கிடைக்கும், நோய்கள் தீரும், குடும்ப பிரச்சனைகள் தீரும், வேலை வாய்ப்பும் கிடைக்கும். ஒரு வருடமாக அவரை வணங்குகிறோம் எங்களுக்கு இதுவரை எந்த அனுபவமும் இல்லை, ஆனால் எங்கள் ஆசைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரித்துள்ளார்.