
பாஜக கட்சியின் மூத்த தலைவரும் குஜராத் மாநில முன்னாள் முதல்வருமான விஜய் ரூபானி அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தார். நேற்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானத்தில் அவர் தன்னுடைய மகளை பார்ப்பதற்காக சென்ற நிலையில் அந்த விமான புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளாது.
இந்த விமானத்தில் மொத்தம் 242 பயணிகள் இருந்த நிலையில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். இந்நிலையில் விஜய் ரூபாணி (68) பற்றிய ஒரு சுவாரசிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது அவரது வாழ்க்கையில் 1206 என்ற நம்பர் மிகவும் முக்கியமானதாக இருந்தது.
அந்த நம்பரை தான் அவர் தன்னுடைய வாகனங்களில் பயன்படுத்தி வந்தார். அவர் முதலமைச்சர் ஆன போதிலும் அவரின் அதிகாரப்பூர்வ காரில் அதே நம்பர் இருந்தது. அவர் அதனை தன்னுடைய வாழ்க்கையின் அதிர்ஷ்ட நம்பராக கருதிய நிலையில் அதுவே அவருக்கு துரதிஷ்டமாகவும் மாறிவிட்டது.
அதாவது விமானம் ஜூன் 12-ம் தேதி (12/06) விபத்தில் சிக்கியது. இதில் 1206 எப்படியோ இருக்கிறது என்பதால் பலரும் இதனை குறிப்பிட்டு அவரது அதிர்ஷ்ட எண்ணே துரதிஷ்டமாக மாறிவிட்டது என குறிப்பிடுகிறார்கள். மேலும் இந்த விமான விபத்தில் பலரும் தங்கள் சொந்தங்களை இழந்து தவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.