தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ள நிலையில் கடந்த மாதம் இந்த படம் வெளிவந்தது. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த்  வரதராஜனின் உண்மை கதாபாத்திர வாழ்க்கை சம்பவத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் கூட படத்தை பாராட்டினர்.

இந்த படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில் படத்தை பார்த்த நடிகர் விஜய் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு 12 வருடங்களுக்கு முன்பாக நடிகர் விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அதனுடன் நன்றி விஜய் சார். ஐ லவ் யூ விஜய் சார். இறைவனிடம் உங்களுக்காக நான் தினமும் வேண்டிக் கொள்வேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். மேலும் இந்த புகைப்படத்திற்கு முன்னால் எடுத்த புகைப்படத்திற்கும் 12 வருடங்கள் 2 மாசம் 1 நாள் 15 மணி நேரம் வித்தியாசம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.