நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2 கணவர்களை பிரிந்துள்ளார். இதைத்தொடர்ந்து மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் அதே பகுதியில் கூலி வேலைக்கு செல்கிறார்கள். இந்தப் பெண்ணுக்கு 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு 13 வயது மகள் இருக்கிறார். இந்த சிறுமி கடந்த 25ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வளர்ப்பு தந்தை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனை வெளியே சொல்ல கூடாது என அவர் சிறுமியை மிரட்டிய நிலையில் தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்ததும் நடந்த விவரங்களை கூறி சிறுமி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்ட தாயார் வெளியே சொல்ல வேண்டாம் என்று கூறிய நிலையில் அதிர்ச்சி அடைந்த சிறுமி தன் பள்ளி ஆசிரியர் மூலமாக புகார் கொடுத்தார். அவர் 1098 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டு புகார் கொடுத்த நிலையில் குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து குன்னூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியின் வளர்ப்பு தந்தை மற்றும் தாயார் இருவரையும் வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.