
கன்னியாகுமரி மாவட்டம் தெரு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுமியின் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் சிறுமியின் தாய் வேலைக்கு சென்று தனது மகளையும் கணவரையும் கவனித்து வந்தார்.
கடந்த மாதம் சிறுமியின் தந்தைக்கு உடல்நலம் மோசமானதால் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அதே பகுதியில் டீக்கடையில் வேலை பார்க்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த சகாயராஜ்(28) என்பவருக்கும் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இந்த நிலையில் சகாயராஜ் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பெற்றோருக்கு தெரியாமல் கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றார். ஆதார் கார்டை புதுப்பிக்க போகிறேன் எனக் கூறிவிட்டு திரும்பி வீட்டிலிருந்து சென்றதாக தெரிகிறது. ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சகாயராஜ் சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. சகாயராஜ் தனது உறவினரிடம் செலவுக்கு பணம் வாங்குவதற்காக நாகர்கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது போலீசார் சகாயராஜை கைது செய்து சிறுமியை மீட்டனர். அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.