தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

இந்த தேர்வு முடிவுகளை  மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட இந்த இணையதளங்களில் தங்களுடைய ஹால் டிக்கெட் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்தால் ரிசல்ட் தெரிந்து விடும். மேலும் மாணவர்களின் கைபேசி நம்பருக்கும் அதாவது பதிவு செய்த செல்போன் நம்பருக்கும் குறுஞ்செய்தி வாயிலாக ரிசல்ட் அனுப்பப்படும்.

இந்நிலையில் ரிசல்ட் வெளியான நிலையில் தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை மொத்த தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.70 சதவீதமும் மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகள் தான் இந்த முறையும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதன் பிறகு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 98.82 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக 97.98 சதவீதத்துடன் ஈரோடு இரண்டாம் இடத்திலும், திருப்பூர் 97.53 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும், கோயம்புத்தூர் 97.48 சதவீதத்துடன் நான்காம் இடத்திலும், கன்னியாகுமரி 97.1% ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.

மேலும் இதே போன்று முக்கியமானங்களில் 100% மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளின் விவரங்களும் வெளிவந்துள்ளது. இதோ அந்த விவரம்,