அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம், காப் கவுண்டி பகுதியில் ஜூன் 4ஆம் தேதி நடந்த மிகக் கொடூரமான சம்பவம் ஒன்றை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒரு தந்தை தனது இரு குழந்தைகளையும் (ஒருவர் 2 வயது, மற்றவர் 8 வார குழந்தை) ஷாப்பிங் மாலுக்கே சென்றபோது காருக்குள் வைத்து விட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. வெப்பம் அதிகரித்து அந்த காரின் உள்ளே 117 டிகிரி செல்சியஸ் (242.6 °F) வரை சூடு வந்த நிலையில், இரண்டு குழந்தைகளும் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தன.

வாகனத்திற்கு அருகில் இருந்த ஒரு பொதுமக்கள் இதைக் கவனித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் வந்ததும் காப் கவுண்டி போலீசார் விரைந்து வந்து குழந்தைகளை காப்பாற்றினர். விசாரணையில் தெரிய வந்ததாவது, ஜே’குவான் டிக்சன் (J’Quawn Dixon) என்ற அந்த தந்தை, வாகனத்தை பூட்டி விட்டு சுமார் 40 நிமிடங்கள் ஷாப்பிங்கிற்காக மாலுக்குள் சென்றிருந்தார். அவர் திரும்ப வந்த போது, போலீசார் அவரை உடனே கைது செய்தனர்.

இதனையடுத்து, ஜே’குவான் டிக்சன் மீது இரண்டாவது நிலை கொடூரம் (Second-degree cruelty) குற்றச்சாட்டில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காப் கவுண்டி வளர்ந்தோருக்கான காவல்நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களில் அமெரிக்காவில் வெப்பம் காரணமாக வாகனத்தில் தனியாக வைக்கப்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குழந்தைகளை வாகனத்தில் தனியாக வைக்கும் பெற்றோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.