
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணியின் கூட்டங்கள் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் நிலையில் பிற்பகல் 3 மணிக்கு கூட்டணி கட்சி தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்துகிறார். அதேபோல் மாலை 5 மணிக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.