இஸ்ரேல் ராணுவ படைகளுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே நீண்ட காலமாக முதல் நிலவி வருகின்றது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள நாப்லஸ் நகர் நகரில் நேற்று முன்தினம் காலை இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 102 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பாலஸ்தீனத்தின் மூத்த அதிகாரி உசேன் அல் ஷேக் கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு பாலஸ்தீனத்தின் அதிபர் மக்மத் அப்பாஸ் கூறியதாவது “இந்த கொடூரமான தாக்குதலுக்கு இஸ்ரேல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

இது எங்கள் பிராந்தியத்தை பதற்றத்தை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக இஸ்ரேல் ராணுவ படையினர் மீது பாலதீனத்தின் ஹமாஸ் போராளிகள் குழுவினர் நேற்று ராக்கெட்களை வீசி உள்ளனர். இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ படையினர் கூறியதாவது “பாலஸ்தீனத்தில் ஹமாஸ் போராளிகள் காசா முனையிலிருந்து இஸ்ரேல் நோக்கி 6 ராக்கெட்டுகளை வீசியுள்ளனர். இந்த ராக்கெட்டுகள் எங்கள் நாட்டின் ஆஸ்கேலான் மற்றும் ஸ்டெரோட் நகரங்களின் நோக்கி வந்தது. அவற்றில் ஐந்து ராக்கெட்டுகள் இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு வானிலேயே வழி மறித்து அளித்துள்ளது” என தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை அடுத்து மத்திய காசா பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது.