சர்வதேச பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு 104 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 104 கொலைகளில் பாதி காசாவில் நடந்துள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில செய்தி சேகரித்த 55 பாலஸ்தீனிய ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 129 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் இறப்பு குறைந்து இருந்தாலும் கூட இது மோசமான ஆண்டுகளில் ஒன்றாகவும் பத்திரிக்கையாளர்களுக்கு ஆபத்தான வருடமாகவும் அமைந்துள்ளது என பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

காசாவில் கடந்த அக்டோபர் 7, 2023 ஆம் அன்று போர் தொடங்கியதில் இருந்து குறைந்தது 138 பாலஸ்தீனிய பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் காசாவில் களத்தில் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் தவிர்த்து வேண்டுமென்றே பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக பொது செயலாளர் பெல்லாங்கர் குற்றம் சாட்டியுள்ளார். மதிய கிழக்கிற்கு அடுத்தபடியாக பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக ஆசிய நாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் 20 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்களில் பாகிஸ்தானில் 6 பேர், வங்கதேசத்தில் 5 பேர் மற்றும் இந்தியாவில் 3 பேர் அடங்குவர் என்றும் அறிக்கை கூறுகின்றது. மேலும் உக்கரைன் போரில் 2024 இல் 4 பத்திரிக்கையாளர்களும் உலகம் முழுவதும் 520 பத்திரிக்கையாளர்கள் தற்போது சிறையில் உள்ளனர் எனவும், கடந்த ஆண்டு மட்டுமே 427 பேர் சிறையில் அடைக்கபட்டதாகவும் தெரிவித்த அவர் கருத்து சுதந்திரத்தை நசுக்கி செய்தியாளர்களை சிறை வைப்பதில் சீனா முதலிடத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.