தபால் நிலையத்தில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அதில் ஒன்றுதான் சுகன்யா சம்ரிதி யோஜனா. 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் பெயரில் ஆரம்பிக்கப்படும் திட்டமாகும்.

இது பெண் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் உபயோகப்படும் என்று தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் படி ஒரு நபர் மாதம் குறைந்தபட்ச தொகையாக 250 ரூபாயும் அதிகபட்ச ரூபாயாக ஒன்றரை லட்சம் ரூபாயும் சேமிக்க துவங்கலாம். இந்த திட்டத்தின் படி சேமிப்பு காலம் என்பது 21 வருடமாகும்.

அதாவது ஒரு பெண் குழந்தையின் ஐந்து வயதில் அவரது பெற்றோர் இந்த கணக்கை துவங்கினால் அந்த குழந்தைக்கு 26 வயது ஆகும்போது இந்த திட்டத்தில் செலுத்திய பணம் வட்டியுடன் வரும். மாதம் 10,000 வைத்து வருடத்திற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தால் 21 வருடம் கழித்து தவணையாக செலுத்திய 17 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயுடன் 37 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் வட்டி சேர்த்து மொத்தம் 55 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

இது பெண் குழந்தைகளின் திருமண செலவிற்கோ மேற்படிப்புக்கு ஆகும் செலவிற்கோ பயன்படும் என்று கூறப்படுகிறது.