உத்திர பிரதேசத மாநிலத்தில் உள்ள ஃபிரசோபாத்தில் சதார் பஜார் அமைந்துள்ளது. இந்த பகுதியில் 100 வருடம் பழமையான கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இந்த கட்டிடத்தின் சுவர்கள் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் இருந்த நிலையில் சம்பவ நாளில் அந்த வழியாக சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

சிலர் வாகனங்களில் அந்த வீட்டை கடந்து சென்றனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. அப்போது அவ்வழியாக சென்று கொண்டிருந்த நாய் கட்டிடம் இடிந்து விழுவது தெரிந்தவுடன் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடியது. ஆனால் கட்டிட விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அது பரிதாபமாக உயிரிழந்தது.

அந்த இடம் முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்த நிலையில் இந்த சம்பவம் அனைத்தும் அந்த பகுதியில் இருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த கட்டிடத்தை முழுவதும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.