
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உமரியா மாவட்டத்தில் பாந்தவுகர் வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. உலகிலேயே அதிக புலிகள் வசிக்கும் உயிரியல் பூங்காவாக உள்ளது. இந்தப் பூங்கா 1150ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வகையான மரங்கள், பூக்கள், உயிரினங்கள், பாலூட்டி இனங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் இங்கு 13 யானைகள் வளர்க்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி முதல் அடுத்தடுத்து 10 யானைகள் இறந்துள்ளது வனத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாகியது. யானைகள் தொடர்ந்து உயிரிழக்க காரணம் புரியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர். அக்டோபர் மாதம் 29ஆம் தேதி நான்கு யானைகளும், அதற்கு மறுநாள் நான்கு யானைகளும் தொடர்ந்து உயிரிழந்துள்ளன.
31 ஆம் தேதி அன்று இரண்டு யானைகளும் உயிரிழந்துள்ளது. யானைகளின் பிரேத பரிசோதனை அறிக்கைகளிலும் எந்தவித சந்தேகத்திற்கு உள்ளான காரணங்களும் தென்படவில்லை. மேலும் இதுகுறித்து வனத்துறையின தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானைகள் சாப்பிட்ட பூஞ்சைகள் படிந்த கருவரகை தானியங்களின் மாதிரிகளை சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மத்திய பிரதேசம் மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இதற்கான காரணம் என்ன என்பதை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.