
ஓபிஎஸ் சார்பில் நடந்த மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் அண்ணன் வெல்லமண்டி நட்ராஜன் அவர்கள் பேசும் போது, திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை ஒரே ஒரு கருத்தை மட்டும் தான் சொல்ல கடமை பட்டிருக்கிறோம். மாநாடு எப்படி நடத்தணும்னு நீங்க தெரிஞ்சிக்கிறதா இருந்தா ? எங்களுடைய சோழமண்டல தளபதி அருமை அண்ணன் ஆர்.வி அவரிடம் கோச்சிங் எடுத்துக்கோங்க. பத்தே நாள் தான். யாருக்கும் தெரிய கூடாது.
சென்ட்ரல் கவெர்மென்ட்டுக்கு சொந்தமான ரயில்வே இடம் பத்து ஏக்கர்ல மாநாட நீங்க நடத்தணும். திருச்சி மாவட்டத்தில் இருக்கிற மாவட்ட கழகச் செயலாளர்களுக்கு மட்டும் தான் இந்த செய்தி தெரியணும். காவல் துறைக்கு கூட என்னைக்கு மாநாடு நடத்த போறிங்க அப்படிங்கிற தகவல் உங்க வாயிலிருந்து வரக்கூடாது. அவங்களா கண்டுபிடிச்சா கண்டு கண்டுபிடிச்சிக்கட்டும். அப்படினு சொல்லி, எங்களுக்கு அறிவுரை கூறிருந்தார்கள்.
அதன்படி 10 நாள்ல மொத்த இடம் 6 ஏக்கர். நாங்க கூட்டம் நடத்துவது 8 ஏக்கர். வாகனங்கள் நிறுத்துனது மொத்தம் 12 ஏக்கர். ஆக மொத்தம் எல்லாம் சேர்த்து 20 ஏக்கர்ல மாநாடு நடத்திருக்கோம். திருச்சி மாவட்டத்தில்… ஒரு மண்டலம் நம்ம இயக்கத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் அருமை அண்ணன் 6 மண்டலமா பிரித்து கூட்டம் போட்டு… மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பிரிந்து உட்கார்ந்து எல்லாத்தையும் களப்பணி ஆற்றணும்னு மண்டல பொறுப்பாளர்களை வைத்து நடத்துனாங்க என தெரிவித்தார்.