
பத்து ரூபாய் மற்றும் இருபது ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியின் காரணமாக சில வியாபாரிகள் இந்த நாணயங்களை வாங்க மறுப்பதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பத்து மற்றும் இருபது ரூபாய் நாணயங்கள் செல்லுபடி ஆகும். இவை அனைத்துமே வங்கிகளில் அரசாங்க அலுவலகங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படும். மக்களும் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் இந்த நாணயங்களை ஏற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் இது போன்ற பெரும்பாலான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே இந்த இரண்டு நாணயங்களும் செல்லாது என்ற பொதுவான எண்ணம் இருந்து வருகிறது. இந்த நாணயங்கள் செல்லுபடி ஆகும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.