உத்தரப்பிரதேசம் முழப்பநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில், பெண் மாணவியை ஒரு ஆண் மாணவன் 10 விநாடிகளில் 9 முறை அறைந்த அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. மே 14ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், BA முதலாமாண்டு மாணவிகளுக்கிடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி, தனது தோழியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்துக்குப் பிறகு, அந்த தோழி தனது காதலனை அழைத்து வந்து தாக்கச் சொன்னதாக புகார் அளித்துள்ளார். இந்த தாக்குதல், மாணவி வீடிற்கு செல்லும் போது கல்லூரி மண்டபம் அருகே நடைபெற்றது.

 

இந்த சம்பவம் தொடர்பாக மாணவி அதே நாளில் கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்திருந்தாலும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிர்வாகம் இந்த சம்பவத்தை “வெளிப்புற பிரச்சனை” எனக் கூறி அலட்சியமாக டிஸ்மிஸ்  செய்துள்ளதாக மாணவி குற்றம்சாட்டியுள்ளார். சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பரவியதுடன், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது.