சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டையில் தனியார் நிறுவனம் ஒன்று நடைபெற்று வருகிறது. அங்கு தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக பெண் ஒருவர் நீண்ட காலமாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தனியார் நிறுவனம் அந்தப் பெண்ணை வேலையை விட்டு நீக்கியதால் மன வேதனையில் நிறுவனத்தின் முன்பே பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நிறுவன HR  இடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விசாரணையில், அப்பெண் கடந்த  10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழும் அந்தப் பெண் அந்த நிறுவனத்தில் தூய்மை பணிகளை செய்து தனது பிள்ளைகளை படிக்க வைத்து வந்துள்ளார். தற்போது வேலையை விட்டு நிறுத்தியதால் செய்வதறியாமல் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.