
தமிழகத்தில் காவலர்கள் பணியில் இருக்கும் போது சீருடைகள் செல்பி எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது காவலர்கள் தங்களுக்கென பணிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கு குறித்த நேரத்தில் செல்வதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது.
இதன் காரணமாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அவர்கள் பணிகளுக்கு சென்ற பிறகு அங்கிருந்து செல்ஃபி எடுத்து சீருடையில் உயர் அதிகாரிகளுக்கு புகைப்படம் அனுப்ப வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அந்த வகையில் டாஸ்மாக் கடைகள் வழக்கமாக 10 மணிக்கு மூடிய பிறகு கடைக்கு முன்பாக நின்று போலீசார் செல்பி எடுத்து அனுப்புகிறார்கள்.