தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்கிறது. வழக்கமாக மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

ஆனால் இந்த ஆண்டு 10 நாட்கள் முன்கூட்டியே மே 13-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.