தமிழகத்தில் நேற்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளிவந்தது. கடந்த 8-ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் நேற்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி அதிகரித்திருந்த நிலையில் ஏராளமான மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பொது தேர்வில் பலர் வித்தியாசமான சாதனைகளை படைத்துள்ளனர். குறிப்பாக இரட்டையர்கள் அனைவரும் ஒரே மாதிரியான மார்க் எடுத்து அசத்தியுள்ளனர். அந்த வகையில் ஒரு தந்தையும் மகனும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த நிலையில் இருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதாவது அருப்புக்கோட்டை மண்டபசாலை பகுதியில் செந்தில்குமார் என்ற 45 வயது நபர் வசித்து வருகிறார். இவரது மகன் கவின்குமார் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் பொது தேர்வு எழுதி இருந்த நிலையில் இருவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் செந்தில்குமார் 500-க்கு 210 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற நிலையில் கவின்குமார் 358 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனால் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.