
ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் தூய்மைப் பணியாளரின் உணர்ச்சி பொங்கிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விவாதத்தில், தூய்மைப் பணியாளர்களைப் பற்றி அவமரியாதையாக பேசியவர்களை அவர் கடுமையாக கண்டித்தார். குறிப்பாக, “பத்து ரூபாய் கேட்கிறார்கள்” என்ற அவதூரை பொறுத்துக்கொள்ளாமல், பத்து ரூபாய் என சொல்லாதீர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்புபவர்கள் கரண்ட் கம்பிக்கு கீழ் குப்பைகளை அடுக்கி விட்டு செல்கிறீர்கள் உயிரை பணயம் வைத்து நாங்கள் வேலை பார்க்கிறோம்.
பத்து ரூபாய் குறித்து பேசுகிறீர்கள் என் கையில் நூறு ரூபாய் இருந்தால் சாலையில் வயதானவர்கள், சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு நான் சாப்பாடு வாங்கி தருவேன். எனக்கு பெரிய மனசு இருக்கு. பத்து ரூபா கொடுப்பதை பத்தி பேசாதீங்க. எங்களுக்கு யாரும் பிச்சை போட தேவையில்லை. நாங்கள் உழைக்கிறோம் எங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்கிறோம் கொடுக்க முடிந்தால் கொடுங்கள் உங்கள் குப்பைகள் கழிவுகள் அனைத்தையும் சகித்துக் கொண்டு நாங்கள் சுத்தம் செய்கிறோம்.
பத்து ரூபாய் கொடுக்கிறோம் என்பது குறித்து கேவலமாக பேசுகிறீர்களே இனி அப்படி பேசாதீர்கள். உங்கள் வாழ்க்கை வேறு, எங்கள் வாழ்க்கை வேறு எங்கள் வாழ்க்கையை ஒப்பிடும்போது உங்கள் அனைவரது வாழ்க்கையும் சொகுசு வாழ்க்கை தான்.
நாங்கள் மழை, வெயில், பனி என எது வந்தாலும் நாங்கள் வேலை பார்த்து தான் ஆக வேண்டும். ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டு பேசுங்கள் என்று அவர் பேசுகிறார் இவர் பேசக்கூடிய வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
View this post on Instagram