
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி பார்த்தேன். ராகுல் காந்தி அவர்களே 17 அட்டம்ட் பண்ணி இருக்காங்க. ஒரு ராக்கெட் ஒருக்கா போனால் கீழே விழுந்தா, திரும்ப எப்படி யூஸ் முடியும் ? அதே விழுந்த ராக்கெட் எடுத்துட்டு வந்து…. பறக்கும் பறக்கும் என்றால் எப்படி பறக்கும் ? ராகுல் காந்தி என்கின்ற ராக்கெட்டை 17 முறை லான்ச் பண்ணி, லாஞ்ச் பண்ணி பாத்துட்டாங்க.
UPAயில் இருந்து….. UPA – 1 , UPA – 2 , 2014, 2019, 2024யிலும் அந்த ராக்கெட். பெயிண்ட் மட்டும் அடிச்சா எப்படி அந்த ராக்கெட் போகும் ? உள்ளே மெஷின் இருக்குன்னும்…. சரியான சாமான் இருக்கணும்…. இதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் எப்போதும் சொல்லிட்டாங்க…. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களிடம் போய் கேட்டாங்க…. அண்ணனே முட்டாள்னா யாருன்னு கேட்டாங்க ? ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னாரு…..
ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப பண்ணி ரிசல்ட் மட்டும் வேற வரும் என்று எதிர்பார்க்கிறார்கள் அல்லவா அவன் தான் முட்டாள். காங்கிரஸ் கட்சி அதே ராக்கெட்… அதே பெயின்ட்….. அதே போஸ்டர்….. கீழே விழுந்தது மறுபடியும் நிறுத்தி வைத்து, அதே அதே திரும்பவும் பண்ணுறாங்க. நமக்கு தெரியும் தமிழ்நாட்டுல இப்போ உதயநிதி ஸ்டாலின் என்ற ராக்கெட்டுக்கு லான்ச் நடக்குது.
அங்கே லான்ச் பண்ணி பார்த்தான்…. இங்கே பண்ணுவோம், இவரையும் பண்ணுவோம்…. ஐயா நம்முடைய இலக்கு சரியாக இருக்கணும்.. நாம் யாரை பற்றியும் தவறாக பேச வேண்டிய அவசியம் நமக்கு இல்ல. நம் வீடு NDA. நம்மோடு மக்கள் இருக்கிறார்கள். யாரோடு கூட்டணி என்றால் ? மக்களோடு கூட்டணி. மக்கள் நம்மோடு இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.