
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பூர்விக பணியை நாங்க தொடங்கிருக்கோம்.
ஏன்னா, இப்போ 5 ஆண்டுக்கு ஒரு முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உறுப்பினரை புதுப்பிக்க வேண்டும், புதிய உறுப்பினர்களை சேர்க்கப்பட வேண்டும். 2018-ல நாங்க வந்து புதிய உறுப்பினர் சேர்த்தோம், பழைய உறுப்பினர்களை புதிப்பிச்சோம்.
5 ஆண்டு ஒரு முறை அந்த பணி செய்யும் விதமாக இப்பொழுது அந்த பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுவரை 1கோடியே 60 லட்சம் பேர் எங்களுடைய இயக்கத்திலே புதிய உறுப்பினர் – ஏற்கனவே இருக்கின்ற உறுப்பினர் புதுப்பிக்க பட்டிருக்கின்றனர்.
அதோடு பூத் கமிட்டி அமைக்கோம், பாசறை அமைக்கோம், மகளிர் குழு இயக்கம் அமைக்கோம். இதையெல்லாம் இன்னும் ஒரு மாதத்துல அமைச்சிருவோம். தேர்தலுக்கு தயாரா இருக்கோம். ஆகஸ்ட் 20.8.2023 அன்று பிரம்மாண்டமான மாநாடு மாநாடு, எழுச்சி மாநாடு நடைபெற இருக்குறது என தெரிவித்தார்.