படித்துவிட்டு வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு மத்திய அரசு ஒரு நற்செய்தியை வழங்கியுள்ளது. அதாவது சிஆர்பிஎப் இல் காலியாக இருக்கும் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இதில் ஆண்கள் ஒதுக்கீட்டில் 1.25 லட்சமும், பெண்கள் ஒதுக்கீட்டில் 4,667 பணியிடங்களும் உள்ளன. 18 முதல் 23 வயது உடையவர்கள் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள். அக்னி வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும். பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மெட்ரிக் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.