
பாகிஸ்தானில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விலைகள் ஏற்கனவே கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் அம்மக்கள் மீது அந்நாட்டு அரசாங்கம் மற்றொரு சுமையை ஏற்றியுள்ளது. அதாவது பேக்கேஜ் செய்யப்பட்ட பால் மீதான 18% வரியை 25% ஆக உயர்த்தியுள்ளது. அதிக உயர் வெப்பநிலை கொண்ட பால் விலையானது ரூ.370 ரூபியாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளின் விலையை விட அதிகம்.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசின் இந்த முடிவு பணவீக்கத்தை அதிகரிக்கும் என்றும், ஏழைக் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.