
நாடு முழுவதும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஜூனியர் என்ஜினியராக பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு மிக முக்கியமான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) ஆனது, மத்திய பொதுப்பணித்துறை, மத்திய நீர் ஆணையம், எல்லை சாலைகள் ஆணையம், தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட துறைகளில் 1340 காலிப்பணியிடங்களை நிரப்ப Junior Engineer (JE) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பணிக்கான தகுதியாக, Civil, Mechanical, Electrical ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். வயது வரம்பாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/ST விண்ணப்பதார்களுக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை: இரண்டு கட்ட கணினி வழி தேர்வு நடைபெறும். முதல் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் பொதுத் தகவல், திறனறிதல் மற்றும் பொறியியல் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவிலிருந்து கேள்விகள் வரும். இரண்டாம் கட்ட தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் முழுக்க முழுக்க பொறியியல் பாடங்களிலிருந்தே வினாக்கள் வரும்.
தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய 8 மையங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. ஆனால் SC/ST பிரிவினர் மற்றும் பெண்கள் விண்ணப்ப கட்டணத்திலிருந்து விலக்கு பெறுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.07.2025
விண்ணப்பிக்க இணையதளம்: 👉 https://ssc.gov.in/
இந்த அரிய வாய்ப்பை பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.