தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி பொது தேர்வு நடைபெற உள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் விவரங்களை பிப்ரவரி முதல் வாரம் வரை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் https://dge1.tn.gov.in/என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.