பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான ‘ஃபக்லி’ படத்தின் மூலம் இந்தியில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தியை தவிர தெலுங்கு உள்ளிட்ட சில மொழி படங்களிலும் நடித்துள்ளார். குறுகிய காலத்தில் பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாக வளர்ந்துள்ளார்.  இந்நிலையில் இவர்  சமீபத்தில் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கினார். அவர் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான Mercedes Maybach S 580 4 Matic மாடல் காரை வாங்கியதாக தெரிகிறது.

மும்பையில் உள்ள டப்பிங் ஸ்டுடியோவுக்கு இந்த விலையுயர்ந்த காரில் கடந்த செவ்வாய்கிழமை அன்று சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அவர் தனது உண்மையான பெயரான ஆலியா அத்வானியில் தனது காரை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.