கர்நாடக மாநிலத்தில் உள்ள சன்னகிரி பகுதியில் அம்ஜத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு மருந்து வாங்குவதற்காக வந்த பெண்களை மோசடி செய்து பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதாவது தன்னுடைய கடைக்கு வரும் பெண்களுக்கு உதவி செய்வது போல் நாடகமாடி அவர்களை தன் வலையில் வீழ்த்தியுள்ளார். இவருக்கு திருமணம் ஆகி குடும்பம் இருக்கும் நிலையில் பெண்களை பலாத்காரம் செய்வதற்காகவே இன்னொரு வீடு வைத்துள்ளார். அந்த வீட்டிற்கு பெண்களை வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் வீடியோவை காட்டி அந்த பெண்களை மிரட்டி மீண்டும் வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் புகார் கொடுக்கவே மெடிக்கல் கடைக்காரர் சிக்கினார்.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில் அம்ஜத்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் 30 பெண்களை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. அவருடைய செல்போனில் 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருக்கிறது. அவர் கற்பழித்ததில் ஒரு சிறுமியும் அடங்குவார். இது மட்டுமின்றி தன்னுடைய கடைக்கு வரும் பெண்கள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் பெண்களையும் அவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவருடைய செல்ஃபோனில் இருந்து ஆபாச வீடியோக்கள் தற்போது whatsapp உள்ளிட்ட சமூக வலைதளத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இதன் காரணமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இந்த வீடியோக்களை யாரும் பகிரக்கூடாது எனவும் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.