அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாயா கோக்காய்(19) என்ற இளம்பெண் கடந்த 23-ஆம் தேதி பெங்களூர் இந்திரா நகர் பகுதியில் இருக்கும் ஹோட்டலில் தனது காதலன் ஆரவ் ஹர்ணியுடன் அறை எடுத்து தங்கி இருந்தார். 2 நாட்கள் ஆகியும் காதலர்கள் வெளியே வரவில்லை. அதன் பிறகு ஆரவ் மட்டும் வெளியே வந்தார். அந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மாயா கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாயாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இரண்டு நாட்களாக மாயா உடலுடன் ஆரவ் இருந்துள்ளார். பெரும்பாலும் அவர் சடலம் முன்பு அமர்ந்து சிகரெட் புகைபிடித்தபடி நேரத்தை செலவிட்டு உள்ளார். இளம்பெண்ணின் தலை, மார்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது. போலீசார் அறையில் இருந்த நைலான் கயிறை பறிமுதல் செய்தனர். அந்த கயிறை ஆரவ் செப்டோவில் ஆர்டர் செய்துள்ளார். மாயாவை கொலை செய்த ஆரவை போலீசார் தேடி வருகின்றனர்.