பாரீஸ் ஒலிம்பிக்  2024 ம் ஆண்டுக்கான போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டிகளில் ஏராளமான சுவாரசியங்களும் சர்ச்சைகளும் அரங்கேறியது. இந்நிலையில்  சீனா நாட்டை சேர்ந்த சோ யாக்கின்(18) என்பவர் ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்துக்கொண்டார்.  அதில் இவர் வெள்ளி பதக்கம் வென்றார். இதைத்தொடர்ந்து அவரது கியூட்டான ரியாக்சன்களால் இணையதளத்தில் வைரலானார்.

இதையடுத்து போட்டி நிறைவுபெற்ற நிலையில், அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அவரது சொந்த ஊரில் அவரது பெற்றோர் ஒரு சிறிய ஹோட்டல் வைத்துள்ளனர். ஊரு திரும்பிய அவர் தனது பெற்றோருக்கு உதவும் விதமாக அவரது ஹோட்டல் உணவு பரிமாறி வருகிறார். போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீராங்கனை ஹோட்டலில் உணவு பரிமாறும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.