பொதுவாகவே நடிகர்கள் அனைவரும் கோடியில் தான் சம்பளம் வாங்குகின்றனர். அதனால் அவர்களுக்கு சொகுசான வீடு மற்றும் கார் என அனைத்துமே இருக்கும். படப்பிடிப்புக்கு வரும்போது அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஏராளமான செலவுகளை வைத்து விடுவார்கள். தற்போது இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் ஒரு பேட்டியில் கோபமாக பேசியுள்ளார். அதாவது ஒரு முன்னணி ஹீரோ படப்பிடிப்புக்கு வந்தால் அவருக்கு ஒரு குறிப்பிட்ட செஃப் சமையல் செய்ய வர வேண்டும் எனவும் அவருக்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் எனவும் தெரிவித்துள்ளார்.

படத்தின் பட்ஜெட்டை தான் இப்படி கூட்டுகின்றனர். அந்த நபர் சமைப்பது குருவிகளுக்கு கொடுக்கும் உணவு போல கொஞ்சமாத்தான் இருக்கும். கேட்டால் நான் அதை மட்டும் தான் சாப்பிடுவேன் மருத்துவர் இவ்வாறு சொல்லி இருக்கிறார் என்று கூறுவார்கள். என்னுடைய செட்டில் இப்படி எல்லாம் நடக்க விடமாட்டேன் என தெரிவித்துள்ளார். ஆனால் அந்த ஹீரோ யார் என்பதை அவர் வெளிப்படையாக குறிப்பிடவில்லை.