
ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும் ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் ஹிந்தியை ஏற்க மறுக்கும் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டும் தான் நிதி தர முடியும் என்று கூறிவிட்ட நிலையில் ஹிந்தியை திணிக்க பார்ப்பதாக தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் இருக்கும் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது,
தமிழ்நாட்டினர் எங்களுக்கு ஹிந்தி வேண்டாம் என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் முதலில் உங்களுடைய தமிழ் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்வதை நிறுத்துங்கள். வடமாநிலங்களில் இருந்து சினிமா டெக்னீசியர்களை சென்னைக்கு அழைத்து வராதீர்கள். ஹிந்தி மொழி உங்களுக்கு வேண்டாம். ஆனால் இந்தி மொழி பேசும் மக்களின் பணம் மட்டும் உங்களுக்கு வேண்டுமா.?இனி தமிழ் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்ய வேண்டாம் என்று தமிழக அரசு சினிமா துறைக்கு உத்தரவிடுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் அவர் தமிழ் சினிமா மற்றும் தமிழக அரசு பற்றி இப்படி விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.