
உலக பணக்கார பட்டியலில் ஒருவரான டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைபடத்தில் எலான் மஸ்க் வித்யாசமாக தோற்றம் அளிக்கிறார். அதாவது தலை முடியின் பக்கவாட்டு பகுதி மற்றும் கீழ்பகுதி முழுவதும் மொட்டை அடித்துள்ளார். மேலும் தலையின் உச்சியில் மட்டும் முடி இருப்பது போல அந்த புகைபடத்தில் உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் எலான் மஸ்கின் முடி அலங்காரத்தை விமர்சித்து வருகின்றனர். அதாவது அவரது சிகை அலங்காரம் ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் சிகை அலங்காரம் போல இருப்பதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் சிலர் எலான் மஸ்க் பார்பதற்கு வடகொரிய அதிபர் கிம் தோற்றத்தில் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் அந்த புகைப்படங்கள் இப்போது எடுக்கபட்டது அல்ல. சோசியல் மீடியாவில் வைரலாகும் எலான் மஸ்கின் விமர்சனத்துக்குள்ளான அந்த புகைபடங்கள் 2021-ஆம் ஆண்டு எலான் மஸ்க் ஒரு கண்காட்சியில் பங்கேற்பதற்காக மியாமி நகருக்கு சென்றபோது விமானத்தில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகும். ஆனால் தற்போது அந்தப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டதால் அது எலான் மஸ்கின் புதிய தோற்றம் என நினைத்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.