தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் தற்போது நடிகர் விஜய் நடிக்கும் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வரும் நிலையில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை மீனாட்சி அடிக்கடி தன் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதமாக போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.